நவம்பர் மாதத்தில் தேசிய மற்றும் தனியார் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!

0
198

கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் என கடந்த 2 மாதங்களுமே அநேக பண்டிகைகள், உள்ளூர் விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் என்று வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அக்டோபர் மாதம் மட்டுமே தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் மொத்தமாக 21 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நவம்பர் மாதம் அப்படி இருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

தீபாவளி ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் முடிந்துவிட்ட நிலையில், இந்த மாதம் மொத்தமே 10 நாட்கள் மட்டும்தான் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2வது 4வது சனிக்கிழமைகளும் அடங்கும். நவம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பதை தொடர்பாக தற்போது இங்கே நாம் பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடத்திற்கும் மாதவாரியாக ரிசர்வ் வங்கி 3 முக்கிய பிரிவுகளின் கேள்வி குறித்து பட்டியலை வெளியிடும். அவை பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை, நிகழ நேர மொத்த தீர்ப்பு விடுமுறை, வங்கிகள் கணக்குகளை மூடுவது.

பொதுவாகவே பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழங்கும் விடுமுறை என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி தான் இருக்கும். அதனை தவிர்த்து அந்தந்த மாநிலத்தில் மற்றும் உள்ளூரில் நடைபெறும் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு அந்த ஊரில் செயல்படும் வங்கிகள் இயங்காது.

அந்த விதத்தில் நவம்பர் மாதம் சனி ஞாயிறு விடுமுறை தவிர்த்து நவம்பர் மாதம் 1 மற்றும் 8, 11 உள்ளிட்ட தேதிகளிலும் மற்றும் 23 உள்ளிட்ட 4 நாட்கள் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 1ம் தேதி கர்நாடக மாநிலம் உருவான நாள் கர்நாடக தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 8ம் தேதி குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி அன்று சீக்கிய மதத்தின் தலைவரான குருநானக் தேவின் பிறந்தநாள் அதனை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 11-ம் தேதி கன்கதாசா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கவிஞர், இசை கலைஞர் என்ற பன்முகத் திறமையை கொண்ட கனகதாசரின் பிறந்தநாள் அன்று கர்நாடகா மற்றும் மேகாலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல நவம்பர் மாதம் 23ஆம் தேதி மேகாலயாவில் இருக்கின்ற காசி என்ற சமூகத்தினரின் காசி புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை தேதிகள்

நவம்பர் 6 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 12 – இரண்டாம் சனிக்கிழமை

நவம்பர் 13 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 20 – ஞாயிற்றுக்கிழமை

நவம்பர் 26 – நான்காம் சனிக்கிழமை

நவம்பர் 27 – ஞாயிற்றுக்கிழமை

Previous articleபள்ளியில் சாரணர் பயிற்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயின் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு!
Next articleதமிழகத்தில் அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கை பாவையாக மாறி உள்ளார்கள்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here