திவாலான கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ்!! இதை வாங்க இரண்டு நிறுவனங்கள் ஆர்வம்!!
திவாலான கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனத்தை வாங்குவதற்கு இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2ம் தேதி கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்தது.
வாடியா குழுமத்திற்கு சொந்தமான இந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதையடுத்து கடந்த மே 2ம் தேதி தேசிய சட்ட நிதி தீர்ப்பாயத்தில் தானாக முன்வந்து திவாலானதாக அறிவித்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தின் விமானங்களை வாங்குவதற்கு இரண்டு நிறுவனங்கள் கடும் போட்டியில் இறங்கியுள்ளது.
டாடா நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் தான் கோ ஃபர்ஸ்ட் விமானங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். டாடா நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்களிடம் தனித் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.