தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்!
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதில் 273 பக்கங்களைக் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் தகவல்களை வெளியிட்டார். தரிசு நிலங்களெல்லாம் தரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
வேளாண்மை என்ற சொல்லே நெடிய வரலாறு கொண்டது.
சங்க இலக்கியங்களில் வேளாண்மை என்ற சொல், உதவி என்ற பொருளில் கையாளப்படுகிறது.
மனித நாகரீகம் உயர்ந்தாலும், உணவின்றி வாழ முடியாது; உழவர் நலன் இல்லாமல் உழவுத்தொழில் இல்லை.
வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது
18 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை அதிகாரிகளுடன் சேர்ந்து கேட்டறிந்தேன்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன்.
நிகர சாகுபடி பரப்பை 60 சதவிகிதத்தில் இருந்து 75 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்; 10 லட்சம் ஹெக்டர் இருபோக சாகுபடி பரப்பு 20 லட்சம் ஹெக்டராக அதிகரிக்கப்படும்”
தென்னை, கரும்பு, பருத்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு இடம் பெற வழி வகை செய்யப்படும்
கிராம அளவிலான வேளாண் தொகுப்புத் திட்டம், மானாவாரி நில மேம்பாடு, தரிசு நில மேம்பாடு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, ஆகிய துறைகள் நிதிநிலை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.