கோப்பையை வெல்லுமா? டி20 உலக கோப்பைக் காக ஆஸ்திரேலியாவிற்கு பறந்த இந்திய அணி!

Photo of author

By Sakthi

இந்த வருடம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பியது. அந்த அணி ஆஸ்திரேலியாவிற்கு கிளம்பும் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு அந்த கோப்பையை வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இந்த முறை உலக கோப்பைக்கு தயாராகும் விதத்தில் ஆஸ்திரேலியாவுடனும், தென்னாப்பிரிக்க அணியுடனும் விளையாடிய தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தன்னுடைய சொந்த மண்ணில் இந்த தொடர்களில் வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் அதனை வெல்வது அவ்வளவு எளிது கிடையாது என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்த முறை இந்திய அணி தன்னுடைய டெத் பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும் பும்ராவும் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை சற்று நிம்மதியை வழங்கினாலும் எண்ணமும் அணியில் தினேஷ் கார்த்திக் ரிஷப் பந்த் உள்ளிட்ட இருவரில் யாரை விளையாட வைக்கலாம் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு சரியான மாற்றுவீரர் அணியில் இல்லை. ஆகவே ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் உண்டானால் அணியில் குழப்பம் உண்டாகும் நிலைதான் தற்போது காணப்படுகிறது.

பும்ராவிற்கு பதிலாக டி20 தொடரில் அனுபவம் பெற்ற ஷமி சேர்க்கப்படுவாரா? இல்லை இளம் கன்று பயம் அறியாது என்று சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பதை இன்னும் யாரும் தெளிவுபடுத்தவில்லை.

இந்திய அணி சென்ற முறை அரையிறுதி வரையில் சென்ற நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆஸ்திரேலிய புறப்பட்ட இந்திய அணியின் வீரர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.