காபி குடிக்க அழைக்கும் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… நடிகை பூனம் பாஜ்வா அவர்களின் வீடியோ இணையத்தில் வைரல்!!

0
35

 

காபி குடிக்க அழைக்கும் ஆண்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்… நடிகை பூனம் பாஜ்வா அவர்களின் வீடியோ இணையத்தில் வைரல்…

 

பிரபல நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் காபி குடிக்க அழைக்கும் ஆண்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியாட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் விளங்கமாகவும் எதார்த்தமாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்த நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

 

தற்போது உடல் எடை காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் “பொதுவாக காபி குடிக்க போகலாமா என்று கேட்கும் ஆண்களிடம் இருந்து சற்று அதிகம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆண்கள் வெகுளித்தனமாக கேட்பது போல இருக்கும். ஆனால் அவர்கள் கேட்பதில் அதிக உள் அர்த்தம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆண்கள் அனைவரும் அதை அழகாக சொல்லி விடுவார்கள். காபி குடிக்க போகலாமா என்று கேட்பதில் அதிக அர்த்தங்கள் உள்ளது. நிறைய பொருள்கள் ஆண்கள் கேட்பதில் புதைந்துள்ளது. எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நடிகை பூனம் பாஜ்வா அவர்கள் பதிவிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்தவர்களில் சிலர் இந்த வீடியோவின் கீழ் “ஏங்க காபி குடிக்க கூப்பிடுவது குற்றமா?” தமாஷாகவும் “நீங்கள் இதுவரை எத்தனை காபி குடித்துள்ளீர்கள்?” என்று வில்லங்கமாகவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.