மீனவர்களை உஷார் படுத்திய வானிலை ஆய்வு மையம்! இந்த 3 மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலர்ட்!

Photo of author

By Sakthi

தமிழக பகுதிகளில் நிலை விவரம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குனர் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழகத்தில் நிலை வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிக கனமழை முதல் அதி கனமழை வரையிலும், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் விருதுநகர் வெள்ளிக்கிழமை மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் ஈரோடு நாமக்கல் கரூர் திருச்சி மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் லட்சத்தீவு பகுதிகள் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள் மாலத்தீவு தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக, மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.