இரயில் பேருந்து ஆகியவற்றை தொடர்ந்து விமானத்திலும் படுக்கை வசதி!! அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிப்பு!!
தற்போது பேருந்துகள், இரயில்களில் படுக்கை வசதி உள்ளது போலவே விமானத்திலும் படுக்கை வசதியை அறிமுகப்படுத்தி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த வசதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல பகுதிகளில் பேருந்துகளிலும், இரயில்களிலும் படுக்கை வசதி உள்ளது. ஆனால் விமானத்தில் படுக்கை வசதி என்பது இல்லை. இந்த வசதியையும் நியூசிலாந்து அரசு கொண்டு வந்துள்ளது.
விமான சேவைகள் பல நாடுகளில் இருக்கும் பச்சத்தில் விமானத்தில் படுக்கை வசதியை நியூசிலாந்து நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி எக்கனாமி வகுப்பு பயணிகளுக்காக இந்த படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதி கொண்ட எக்கனாமி வகுப்பில் இரயில்களில் பேருந்துகளில் கொடுக்கப்படுவதை போல தலையணையும், படுக்கை விரிப்பும் கொடுக்கப்படுகின்றது. 4 மணி நேரப் பயணத்திற்கு மட்டுமே இதை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுக்கை வசதி கொண்ட விமானத்தில் பயணிக்க இந்திய மதிப்பில் 20,800 ரூபாயில் இருந்து 30,800 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான சேவை நியூசிலாந்து மற்றும் அமேரிக்கா நாடுகளுக்கு இடையே செயல்படுத்தப்படவுள்ளது. இந்த விமான சேவை 2024ம் ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது.