பெலவாடி வீர நாராயணர் கோவில்! சிறப்பம்சங்கள்!

Photo of author

By Sakthi

வீரநாராயணர் கோவில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்மகளூரு மாவட்டத்திலுள்ள பெலவாடி என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது.

போசள பேரரசர் இரண்டாம் வீர வல்லாளன் கிபி 1200 போசளர் கட்டிடக்கலை மையத்தில் கட்டிய கோவில் தான் இந்த வீர நாராயணர் கோவில்.

இந்த நகரத்துக்கு தென்கிழக்கில் 29 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பேலூர் மற்றும் ஹளேபீடு உள்ளிட்ட உலக பாரம்பரிய தளங்கள் வீர நாராயணர் கோவிலுக்கு அருகில் இருக்கின்றன.

வைணவக் கோயிலான வீர நாராயணன் கோவிலில் விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான எட்டடி உயர நாராயணனின் முக்கிய சன்னதி 7 அடி உயர புல்லாங்குழல் இசைக்கும் வேணுகோபாலன் சன்னதி மற்றும் யோகநரசிம்மர் சன்னதிகள் அமைந்துள்ளன.

வீர நாராயணர் மிகவும் கம்பீரமாக காட்சி தருகிறார், கண்களிலும் வீரம் தெறிக்கும் விதமாக இருக்கிறது. 4 கரம் கொண்டவராக தாமரை ஒன்றின் மீது நின்ற கோலத்தில் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.

8 அடி உயரம் அந்த சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த கிராமத்தை சுற்றிலும் கருடன் காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவிலான ஸ்ரீதேவி, பூதேவி, இருவரும் காட்சியளிக்கிறார்கள்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 28ம் தேதி 7 வாசல்களையும், தாண்டி பெருமாளின் மீது சூரிய கதிர்கள் படும் அது ஒரு அற்புத நிகழ்வு என்கிறார்கள்.

7 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார், யோகநரசிம்மர் கையில் சங்கும், சக்கரமும், வைத்திருக்கிறார். இருபுறமும் ஸ்ரீதேவியும், மூதேவியும், இங்கும் காட்சியளிக்கிறார்கள்.

முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள வளைவு பகுதியை சிற்பக்கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரை சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் 10 அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.

இந்த கோவிலில் 2 சன்னதிகளுக்மிடையே அமைந்த திறந்த வெளி மண்டபத்தில் 70 செவ்வகம் மற்றும் சதுர வடிவ அமைப்புகள் கொண்டிருக்கிறது.

இந்த கோவில் வளாகத்தில் 2 மூடிய மண்டபங்களில் ஒன்றில் 36 செவ்வக அமைப்புகளும், 19 செவ்வக அமைப்புகளும், கொண்டிருக்கின்றன.

இந்த கோவிலின் 3வது சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது என சொல்லப்படுகிறது. பழைய சன்னதியின் சுவர்கள் பழமையாக இருந்தாலும் இதன் கூரைகள் அழகிய கட்டிட நயத்தில் இருக்கிறது. இந்த கோவில் வளாகம் 59 பூஜைக்கான மணி வடிவ குவிமாடங்களுடன் பல தூண்களுடன் இருக்கிறது.

இந்த கோவிலின் 2 புதிய சன்னதிகள் 2 வேறுபட்ட அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு சன்னதி விண்மீன் உருவத்தில் அமைந்திருக்கிறது.

இந்த சன்னதியின் கோபுர கலசங்கள் அழகிய பானை வடிவத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. 3 சிறிய தளங்கள் கொண்ட கோபுரத்தில் இந்த கலசங்கள் இருக்கின்றன.

கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் தலை மீது நின்று நர்த்தனம் ஆடும் சிற்பம் மற்றும் கருட அழகிய நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது என சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்திற்கு 3 விமானங்கள் அதாவது 3 கருவறைகள் ஒவ்வொன்றிலும் ஒருவிதமான திருமாலின் வடிவம் இருக்கிறது, கூரை பகுதி சாய்வாக கட்டப்பட்டிருக்கிறது.

யானைகளின் மீது ஹொய்சளார்களுக்கு தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே, என பல யானையின் உருவங்கள் காட்சி தருகின்றன

பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது அங்கே ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும், காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமுmu ள்ள பலபலவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.