தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ்!!! அபாரமாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!!

0
40
#image_title

தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ்!!! அபாரமாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஒருவனாக 182 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு காரணமாகி உள்ளார்.

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே 4 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதையடுத்து தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர் 13) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் பத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 39 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போனது.

இதையடுத்து 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதால் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 368 ரன்கள் குவித்ததற்கு காரணம் பென் ஸ்டோக்ஸ் அடித்த சதமும் டேவிட் மாலன் அடித்த அரைசதமும் தான் காரணம். பென்ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 124 பந்துகளில் 182 ரன்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 15 போர்கள் மற்றும் 9 சிக்சர்கள் அடித்திருந்தார். அதே போல அதிரடியாக விளையாடி சதம் அடித்த டேவிட் மாலன் 4 ரன்களில் சதத்தை தவற விட்டார். டேவிட் மாலன் அவர்கள் 95 ரன்கள் சேர்த்தார். அதே போல நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.