கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

Photo of author

By Sakthi

கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

Sakthi

கொரோனா தொற்றுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் ஐதராபாத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது கோவேக்சின் தடுப்பூசி. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், சினகா மருந்து நிறுவனமும், ஒன்றாக இணைந்து உருவாக்கி இந்தியாவில் புனே சீரம் நிறுவனம் ஒன்றாக இணைந்து தயாரித்து வழங்குவது கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.

இந்த இரு தடுப்பூசிகளில் கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாகவும்,கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும், செலுத்திக் கொண்டால் நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேஷன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

கலப்பு தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பாக கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட இரு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகளாக செலுத்தி கொள்கிற சமயத்தில் நோய்தொற்று  புரதத்தை அழிக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக ஏற்படுகிறது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாக இது இருக்கிறது என்று ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேஷனின் எஐஜி மருத்துவமனையின் தலைவர் டி நாகேஷ்வர ரெட்டி தெரிவித்திருக்கிறார்.