காலை எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

0
272

ஒருவரின் செயலுக்குரிய புலன்களில் கைகளுக்கு தனி இடம் உண்டு.நாம் செய்யும் அனைத்து செயல்களையும் நாம் இரு கைகளால் தான் செய்கின்றோம். இத்தகைய பெருமை மிக்கநமது உள்ளம் உள்ளங்கையால் நாம் விழிக்கும்போது ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் வைத்து உள்ளங்கைகளை பார்க்கவேண்டும் என்கிறது ஆன்மீகம்.நமது உள்ளங்கையில் மஹாசக்தி, மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள் என்னி ஆன்மிகம் கூறுகிறது. கை நுனியில் அலைமகளும் ,நடுவில் கலைமகளும், அடிப்பகுதியில் கோவிந்தனும் இருப்பதாக ஹஸ்தரேகா சாஸ்திரம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி இந்து தெய்வங்களை நாம் பார்க்கும் பட்சத்தில் பல தெய்வங்கள் கைகள் வணங்கியபடியும் பெரும்பாலான தெய்வங்கள் தங்களது உள்ளங்கைகள் மூலம் ஆசி வழங்குவது போன்றும் காட்சி அளிப்பதை நாம் காணலாம்.ஏன் திருமணத்தில் கூட இரு விரல்கள் கோர்த்து அக்னியை சுற்றி வந்து கண்ணகியை ஆண்மகன் கைகளில் ஒப்படைப்பர்.

இத்தகைய பெருமை வாய்ந்த நமது உள்ளங்கைகளில் நாம் காலை எழுந்தவுடன் விழிக்கும் பொழுது தெய்வ அருள் பெற்று அன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் திறமையுடனும் செயல்படுவோம் என்று ஆன்மீகரீதியாக நம்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி மகாலட்சுமியின் அருள் பெற்று அன்று நாள் முழுவதும் அதாவது நமது தொழிலில் செல்வம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleகுழந்தைகளுக்கு அதிகம் பிஸ்கட்டுகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்?
Next articleதொப்பையை குறைக்க எளிய இயற்கை உணவு முறைகள்!!