மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது?

0
172
Bengali female lion to attack Modi government What's going on there?
Bengali female lion to attack Modi government What's going on there?

மோடி அரசை கடுமையாக தாக்கும் வங்கத்து பெண் சிங்கம்! அங்கே என்ன தான் நடக்கிறது?

உத்திர பிரதேசத்தில் பாஜ அரசே ஆட்சி அமைத்து வருகிறது. தற்போது உயிர் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டாலும் அந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மோடிக்கு எதிராக பல்வேறு எதிர் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கத்து சிங்கம் மம்தா பானர்ஜி நேரடியாகவே பல விசயங்களில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். அதை பல விஷயங்களில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். பஞ்சாப் விவசாயிகள்  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களை என்னவென்று கூட மோடி இதுவரை கேட்கவில்லை.

அரசு மந்திரிகளுடன் பல்வேறு கூட்டங்களில் விவசாயிகள் கலந்து கொண்டாலும் கருத்துக்களில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அவர்கள் இன்று வரை போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் எந்த ஒரு கலவரத்தையும் ஏற்படுத்த வில்லை. அவர்கள் அறவழியில் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் நடப்பது ராம ராஜ்ஜியம் அல்ல, மக்களை கொல்லும் ராஜ்ஜியம். அங்கு விவசாயிகள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் நடைபெற்றிருப்பது அராஜகமானது, துரதிர்ஷ்டவசமானது. லக்கிம்பூர் கேரியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

விவசாய சகோதரர்கள் மீது பா.ஜ.க. காட்டும் அலட்சியம் எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு எப்போதும் எங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தொடரும் என்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

Previous articleமுதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!
Next articleஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்!