கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி ஒட்டுமொத்த நகரமும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு உண்டானதுடன், பொது மக்களின் வாகனங்களும் சேதமடைந்தனர். பல்லாண்டு ஓர் சிவாஜி நகர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் குலம் போல மழைநீர் தேங்கியது இதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள்.
அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பலர் சிரமத்திற்கு உள்ளானார்கள் அதிகபட்சமாக ராஜமஹால் குட்டாகள்ளி பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானது சிவாஜி நகர் பகுதியில் வீடுகளை எல்லாம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர் வீதிகளில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
குறிப்பாக மெஜஸ்டிக் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் சேதம் அடைந்தனர் நல்ல நிவாரண பணிகளில் அரசு தீவிரமாக களம் இறங்கி மழை நீரை வெளியேற்றும் பணிகளை துரிதமாக செய்து வருகின்றன. அதேநேரம் அந்தமான் நிக்கோபார் தீவுகள், கர்நாடகா, தமிழகம், கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.
குறிப்பாக பெங்களூரில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால் அங்கே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது பெங்களூருவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மழை பொழிவு இருந்தது 2022-ல் இதுவரையில் மட்டும் 170.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்ற ஒரு மாதத்திற்கு முன்னர் பெங்களூருவில் உண்டான கனமழை நல்ல பாதிப்பு காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகி ஐடி நிறுவனங்கள் ரூபாய் 225 கோடி மதிப்பில் இழப்புகளை சந்தித்தனர். அதோடு நகரின் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் கூட சில தினங்களுக்கு தடைப்பட்டு இருந்தது.