ரிஷப்பண்ட்டை கவுரவித்த ஐசிசி! காரணம் இதுதான்!

Photo of author

By Sakthi

சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மாதம்தோறும் தேர்வு செய்து பெருமை படுத்த ஐசிசி முடிவு செய்திருக்கிறது .அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ரிஷப் பந்த் இந்த பாராட்டிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதோடு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 97 ரன்கள் விளாசி இருந்தார்.

இதன் காரணமாக, இந்திய அணி பிரிஸ்பேனில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. ஐசிசி ரிஷப் பண்ட் பெயரை இதன்காரணமாகவே பரிந்துரை செய்திருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஜோ ரூட் இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 228 ரன்கள், மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 176 ரன்கள் என தன்னுடைய திறமையை சிறப்பான முறையில் வெளிக்காட்டி இருக்கிறார். ஆகவே ஜோ ரூட் இலங்கை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது அவருடைய பெயரையும் ஐசிசி இந்த பட்டியலில் பரிந்துரை செய்திருக்கிறது.