புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

Photo of author

By Janani

புது வீட்டுக்கு குடி போக உகந்த மாதங்கள்..!! குடி போக கூடாத மாதங்கள்..!!

Janani

நாம் வசிக்கும் வீடு என்பது தான் நமது வாழ்க்கை. அவ்வாறு இருக்கையில் புதியதாக ஒரு வீடு கட்டி குடி போகிறோம் அல்லது புதிய வீடு வாங்கி அதனுள் குடி போகிறோம் என்றால், அதற்கு என நல்ல மாதங்கள், நல்ல நாட்கள், நல்ல நேரம் என அனைத்தையும் பார்த்து குடி போனால்தான் நாம் வாழும் வாழ்க்கையானது சிறப்பானதாக அமையும். காலம், நேரம் என எதையும் பார்க்காமல் குடி போனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

எந்தெந்த மாதத்தில் புது வீட்டிற்கு குடி போகலாம், அதேபோன்று எந்தெந்த மாதத்தில் புது வீட்டிற்கு குடி போகக் கூடாது என்பதையும், ஏன் அந்த மாதத்தில் குடி போக கூடாது என்பதற்கான விளக்கத்தையும் தற்போது காண்போம்.

குடி போக கூடாத மாதங்கள்:

1. ஆனி மாதம்-இந்த மாதத்தில் புது வீட்டிற்கு குடி போவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஏனென்றால் இந்த மாதத்தில்தான் மகாபுர சக்கரவர்த்தி தனது ராம்ராஜ்ஜியத்தை இழந்தார்.

2. ஆடி மாதம்-இந்த மாதம் ஆனது இராவணனை சம்ஹாரம் செய்த மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் புது வீட்டிற்கு குடி போக கூடாது.

3. மார்கழி மாதம்-இந்த மாதத்தில் தான் பாரதப் போர் நடந்தது. எனவே இந்த மாதத்தில் குடி போக கூடாது.

4. புரட்டாசி மாதம்-புது வீட்டிற்கு குடி போவதற்கு புரட்டாசி மாதம் அவ்வளவு விசேஷமாக இருக்காது.

5. மாசி மாதம்-பரமசிவன் அகால விஷத்தை உண்ட மாதம் தான் இந்த மாசி மாதம். எனவே இந்த மாதத்தில் புது வீட்டிற்கு குடி பெயரக் கூடாது.

6. பங்குனி மாதம்-சிவன் மன்மதனை எரித்த மாதம் இந்த பங்குனி மாதம். எனவே பங்குனி மாதத்திலும் புது வீட்டிற்கு குடி போகக் கூடாது.

இந்த மாதங்கள் தவிர்த்து வேறு மாதங்களில் ஏதேனும் விசேஷங்கள் செய்து கொள்ளலாம்.அவ்வாறு விசேஷங்கள் செய்யும் பொழுது, அந்த விசேஷத்தை வெள்ளி, சனி, திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

அதேபோன்று திங்கள்கிழமை நாட்களில் மருத்துவமனைக்கு ஏதேனும் ஒரு முதல் பரிசோதனை அல்லது அறுவை சிகிச்சை செய்வதற்கு என செல்லக்கூடாது. அவசர சிகிச்சை என்கிற பொழுது வேண்டுமானால் திங்கள் கிழமையில் சென்று தான் ஆக வேண்டும்.

மேஷம் லக்னம் வரும் பொழுது விவாகம் செய்யக்கூடாது. ரிஷப லக்னத்தின் பொழுது திதி கொடுக்கக் கூடாது. மிதுன லக்னத்தின் பொழுது யாத்திரைகள் செல்லக்கூடாது. கடக லக்னத்தின் பொழுது தோப்பு துரவுகளை வைக்க தொடங்கக் கூடாது. சிம்ம லக்னத்தின் போது பெண் பார்க்க செல்லக் கூடாது. கன்னி லக்னத்தின் பொழுது சாந்தி முகூர்த்தம் வைக்க கூடாது.

துலாம் லக்னத்தில் தோப்பு, காடுகள் போன்றவற்றை வாங்க கூடாது. விருச்சிக லக்னத்தின் பொழுது பெண் பார்த்தல், ஏறு பூட்டுதல் ஆகியவற்றை செய்யக்கூடாது. தனுசு லக்னத்தின் பொழுது கிணறு வெட்டக்கூடாது. மகரம் லக்னத்தின் பொழுது ஓடம் விடக்கூடாது. கும்பம் லக்னத்தின் பொழுது சவரன் செய்யக்கூடாது. மீனம் லக்னத்தின் பொழுது படிப்பு சம்பந்தமான செயல்களை தொடங்கக்கூடாது.