நடிகர் விஜயுடன் நடித்துள்ள பகத் பாசில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
148

 

நடிகர் விஜயுடன் நடித்துள்ள பகத் பாசில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

 

தற்போது இணையத்தில் எல்லாராலும் பேசப்பட்டு வரும் நடிகர் பகத் பாசில் அவர்கள் முன்பு ஒருமுறை நடிகர் அவர்களுடன் சேர்ந்து நடித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

 

வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பகத் பாசில் அவர்கள் இயக்குநர்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின்.நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

மாமன்னன் திரைப்படத்தில் இரத்தினவேலு என்ற பெயரில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் பகத் பாசில் அவர்களை பற்றியும் மாமன்னன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பற்றியும் தான் தற்பொழுது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் நடிகர் பகத் பாசில் அவர்களுடைய காட்சிகளை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் பகத் பாசில் அவர்களுடைய காட்சிகளை வைத்து சாதியப் பாடல்களுடன் வைத்து எடிட் செய்த வீடியோ அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் நடிகர்.பகத் பாசில் அவர்கள் அவருடைய முகநூல் பக்கத்தின் கவர் போட்டோவில் இருந்து மாமன்னன் திரைப்படத்தின் புகைப்படத்தை அகற்றினார்.

 

நடிகர் பகத் பாசில் அவர்கள் நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடித்தால் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில் ஜாஸ் ஆலுக்காஸ் நகைக் கடை விளம்பரத்தில் நடிகர் விஜய் அவர்களும் நடிகர் பகத் பாசில் அவர்களும் சேர்ந்து நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. மேலும் அந்த விளம்பய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.

 

நடிகர் விஜய் அவர்கள் இயக்குநர் பாசில் இயக்கத்தில் காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் பாசில் நடிகர் பகத் பாசில் அவர்களின் தந்தை ஆவார். நடிகர் விஜய் இயக்குநர் பாசில் கூட்டணியில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.