சனியின் தாக்கத்தை குறைக்க வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்!

Photo of author

By Sakthi

மனித வாழ்க்கையை பொருத்தவரையில் நவகிரகங்களின் பங்கு இன்றியமையாதது.அதிலும் கர்ம வினை பயன் உள்ளிட்டவற்றை வழங்கும் சனீஸ்வரனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் இவருடைய தசாபுத்தியோ அல்லது பார்வையோ ஒருவருக்கு வந்துவிட்டால் படும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை.

அதன் காரணமாகவே இவரை மனிதர்களுக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது.அவர் ஆயிரம் துன்பங்கள் தந்தாலும் அது அனைத்தும் மனிதர்களுடைய நன்மைக்கே என்பது பலரும் அறியாத உண்மை.இன்று நாம் சனியின் தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பது தொடர்பாக பார்க்கலாம்.

கர்ம வினைப்பயனை வழங்கும் சனீஸ்வரனின் தாக்கத்தை நிறுத்திக் காட்ட காலபைரவர் வழிபாடு தான் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. புதிய நீல துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும், அதன் பின்னர் அதனை இரும்பு கிண்ணத்தினுள் வைக்கவேண்டும். அவ்வாறு வைத்த பிறகு அந்த இரும்பு கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீல துணி பொட்டலம் முழுமையாக மூழ்கி இருக்க வேண்டும் அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இவ்வாறு 8 தீபங்கள் ஏற்ற வேண்டும் என சொல்லப்படுகிறது.இப்படி 16 சனிக்கிழமைகளுக்கு காலபைரவரின் சந்ததியில் தீபங்களை ஏற்றி வந்தால் கர்மவினை பலனளிக்கும் சனீஸ்வரனின் தாக்கம் குறையும் என்று சொல்கிறார்கள்.