பயத்தை போக்கும் காலபைரவர்!

Photo of author

By Sakthi

அனைத்து சிவன் கோவில்களிலும் இருப்பவர் காலபைரவர் இவரை வழிபடாமல் சிவபெருமானின் வழிபாடு பூர்த்திடையாது என்று சொல்வார்கள் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு அதன்பிறகு ஆலயத்திற்குள் நுழைய வேண்டும் என்பது தான் ஐதீகம்.

அதேபோல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்யும்போது கடைசியாக கால பைரவரை தரிசனம் செய்யலாம், அவ்வாறு தரிசனம் செய்யாமல் வரக்கூடாது. ஒவ்வொரு சிவாலயத்தின் பாதுகாவலராகவும் ,இந்த பைரவ மூர்த்தி இருந்து வருகிறார்.

வாழ்க்கை எதிரிகள், வாட்டி வதைக்கும் நோய் மற்றும் வறுமை என்று எதைப்பற்றிய பயமாகயிருந்தாலும் அது நீங்கி சிறப்பு பெற இவரை தரிசித்து வந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு இவர் பயத்தை போக்குபவராக திகழ்கிறார்.

சிவபெருமானின் 64 திரு வடிவங்களில் முக்கியமானதாக பைரவர் வடிவம் திகழ்கிறது. இவர் பிரம்மாவின் ஆணவத்தை அகற்றுவதற்காக சிவபெருமானால் தன்னுடைய அம்சமாக தோற்றுவிக்கப்பட்டது. இவர் தோன்றிய தினமான கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி குறிப்பிடப்படுகிறது.

இவரை வழிபட தேய்பிறை அஷ்டமி சிறப்புக்குரிய நாளாகும். ஆனாலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி அவருடைய ஜென்மாஷ்டமியாகவும், வருவதால் இது காலபைரவ அஷ்டமி என கொண்டாடப்பட்டு வருகிறது.

12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பைரவ மூர்த்தியை காலபைரவ அஷ்டமி அன்று திருமகளின் 8 வடிவங்களுமான அஷ்டலட்சுமிகளும், வணங்குவதாக ஐதீகமொன்று இருக்கிறது.

காலத்தின் கடவுளாக பார்க்கப்படும் தன்னை வணங்குபவர்களின் தலைவிதியை மாற்றும் சக்தியுடையவர் ஆகவே இவரை கால பைரவ அஷ்டமியன்று வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி வழிபடலாம். அதோடு நல்லெண்ணெய் தீபம் ஏற்றியும், விபூதியால் அபிஷேகம் செய்தும், வணங்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவருக்கு தேங்காயில் தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. தேங்காயை இரண்டாக உடைக்கும் போது அதில் மூன்று கண் இருக்கும் பகுதியில் 5 விதமான எண்ணெய்கள் ஊற்றி தீபம் இடுவது சிறப்பான பலன்களை தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் ஆணவத்தின் காரணமாக, சிவபெருமானையே அழிக்க நினைத்தார்கள். அப்போது பிட்சாடனராக வந்த சிவபெருமான் தனக்குள் இருந்த கால அக்னியை கொண்டு தாருகா வனத்தை அழித்தார்.

இதனால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது சூரியனும் கூட தோன்றவில்லை. அப்போது பைரவமூர்த்தி 8திசைகளிலும் தோன்றி ஒளியை ஏற்படுத்துவாயாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு அவர் 8 திசைகளிலும் தோன்றிய வடிவங்கள் அஷ்டபைரவர் களாக போற்றப்பட்டு வருகிறது.

குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பிட்சா பைரவர், கபால பைரவர், கால பைரவர்,என்பன அந்த 8 பைரவர்கள் பொதுவாக பைரவருக்கு நாய் தான் வாகனமாக இருக்கும். ஆனாலும் அஷ்டபைரவர்களுக்கு அன்னம், யானை, குதிரை, என்று 8 விதமான விலங்குகள் வாகனங்களாக திகழ்கின்றன.