விலைவாசி உயர்வு மற்றும் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை போன்ற எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்ற மாதம் 7ம் தேதி இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி இந்த யாத்திரை கேரளா வழியே கர்நாடகாவை அடைந்தது.
இந்த யாத்திரையில், கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, டி. கே. சிவக்குமார் போன்ற மூத்த தலைவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுக் கொண்டார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு சிலரும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்த யாத்திரையில் பங்கேற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு ராகுல் காந்தி தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தார்.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்த இந்திய ஒற்றுமையாத்திரையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுக் கொண்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பெண்கள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு பூரண கும்ப மரியாதை வழங்கினர்.