விமானப்படை நிகழ்ச்சியில் கீழே விழுந்த பைடன்! நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது!
விமானப்படை பயிற்சி அகதெமியின் பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் தடுக்கி விழுந்த சம்பவம் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் அதிக வயதுள்ள அதிபராக ஜோ பைடன் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் அவர்களின் தற்போதைய வயது 80 ஆகும்.
இதையடுத்து கொலராடோ மாகாணத்தில் உள்ள விமானப்படை பயிற்சி அகாதெமியின் பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் அவர்கள் நேற்று அதாவது ஜூன் 1ம் தேதி கலந்துகொண்டார்.
பயிற்சியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பட்டம் அளிக்க எழுந்த அதிபர் ஜோ பைடன் அவர்கள் கால் தவறி கீழே விழுந்தார். பின்னர் உடனடியாக அருகே இருந்த விமானப்படை ஊழியர்கள் அதிபர் ஜோ பைடன் அவர்களை தூக்கினர். இதைத் தொடர்ந்து அதிபர் ஜோ பைடன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்பட வில்லை அவர் நலமுடன் உள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.