வெள்ளை மாளிகை வெளியிட்ட புதிய தகவல்! குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜோ பைடன் சந்திப்பு!

0
184

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற மே மாதம் குவாட் உச்சி மாநாடு நடைபெறுகிறது இதில் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன.

எதிர்வரும் மே மாதம் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் பயணம் மேற்கொள்கின்றார்.

இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாகி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று கொள்வார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து அதிபர் ஜோ பைடன் உரையாற்றுவார் அதோடு இந்தோ பசுபிக் பகுதியில் ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த நிலையிலான பைடன் ஹாரிஸ் அரசின் உறுதியான ஈடுபாட்டை முன்னேற்றமடைய செய்யும் விதத்தில் இந்த சுற்றுப்பயணமிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தென் கொரிய அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமர் உள்ளிட்டோருடன் ஜோ பைடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சாகி தெரிவித்ததாவது, தலைவர்களுடனான இந்த சந்திப்பில் நம்முடைய முக்கிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், நடைமுறை முடிவுகளை மேற்கொள்வதற்கான நம்முடைய நெருங்கிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு போதிய வாய்ப்புகள் தொடர்பாக ஆலோசனை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டோக்கியோவில் இந்தியா, அமெரிக்கா. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய குழுவின் தலைவர்களையும் பைடன் சந்திப்பார். இந்த பயணம் தொடர்பான கூடுதல் விவரங்களை மிக விரைவில் பகிர்ந்து கொள்வோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Previous articleதஞ்சாவூர் தேர் விபத்து! விளக்கமளிக்க வார்த்தைகளில்லை முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
Next articleநீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று உங்கள் எதிரிகள் உதிரியாகும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here