சோவியத் ரஷ்யாவிற்கு உதவி புரிந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 1 மாதத்தை கடந்து கடுமையான போர் நீடித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அதோடு ஐநாசபை போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தது. ஆனாலும் ரஷ்யா இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் ஜி 7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது உக்ரைன் நாட்டில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, உலகளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .இந்த போரில் ரஷ்யாவுக்கு உதவி புரிந்தால் சீனா கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

ரஷ்யாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியக் கூறுகள் தொடர்பாக கடந்த வாரம் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் மிகவும் நெருங்கிய உரையாடல்களை நடத்தினேன் என்று தெரிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர்.

ரஷ்யாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை சீனா புரிந்து கொண்டிருப்பதாக நினைக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.