தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்!

Photo of author

By Sakthi

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களின் வாழ்க்கையில் 100 நாட்கள் அவர்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியானது தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் கன்னடம் ஏழாவது சீசனில் பங்கேற்ற நடிகை மற்றும் எழுத்தாளருமான சைத்ராகோட்டூர் மாண்டியாவை சார்ந்த தொழிலதிபர் நாகர்ஜுனா அவர்களை கடந்த இரண்டு ஆண்டு காலமாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அவரை கரம்பிடித்தார்.இந்த திருமணத்திற்கு நாகார்ஜுனாவின் வீட்டார் சம்மதம் தெரிவிக்காததால் அவர்கள் யாரும் அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக சைத்ரா தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பினாயிலை குடித்து அவர் தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அவருடைய தந்தை தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் மூலமாக அவர் பாடம் கற்று இருப்பதாகவும் இனிவரும் காலங்களில் அவருடைய வேலையை மட்டும் அவர் பார்த்துக் கொள்வார் என்று சைத்ராவின் தந்தை தெரிவித்திருக்கிறார். சைத்ராவின் இந்த தற்கொலை முயற்சி குறித்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினர் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.