ரசிகர்களுக்கு பிக்பாஸ் பிரபலம் குட் நியூஸ்!

0
184

பிக்பாஸ் பிரபலமான சிவானி விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் விஜய்சேதுபதி 46 என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அவர் மேலும் ஒரு திரை படத்தில் நடிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதாவது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆர் ஜே பாலாஜியின் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் இந்த திரைப்படம் தொடர்பாக சிவானியிடம் கேள்வி எழுப்பிய போது எந்தவிதமான தகவலும் தற்போது தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இருந்தாலும் இந்தி படமான பதாய்ஹோ என்ற திரைப்படத்தை தான் தமிழில் வீட்ல விசேஷங்க என்ற பெயரில் ஆர் ஜே பாலாஜி ரீமேக் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம் சிவானி அதோடு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ,சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஉலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!
Next articleஇனி வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ 3 ஆயிரம்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here