முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

Sakthi

Updated on:

டெல்லியில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சார்ந்த நவ்தீத் என்பவர் உயிரிழந்தார். அந்த சமயத்தில் காவல் துறையினர் சார்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தான் அவர் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

அந்த சமயத்தில் அவருடைய வாகனத்திற்கு பின்னால் காவல்துறை, மற்றும் கட்சி நிர்வாகிகள், போன்றோரின் வாகனங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்தனர். சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து உண்டானது. ஆனாலும் அதில் யாருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.