வெளியானது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை!

0
123

தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பால் முடங்கிப்போன பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சென்ற மாதம் 19ஆம் தேதி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனை அடுத்து சென்ற எட்டாம் தேதி ஒன்பதாம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் ஆரம்பம் ஆயின. மாணவர்களுடைய நலனை மனதில் வைத்து 40 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணை தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

இந்த அட்டவணையின்படி மே மாதம் மூன்றாம் தேதி பொதுத்தேர்வு ஆரம்பமாகிறது. மே மாதம் மூன்றாம் தேதி தமிழ், மே மாதம் 5ஆம் தேதி ஆங்கிலம், மே மாதம் ஏழாம் தேதி கணினி, அறிவியல், மே மாதம் 11ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம் ஆகிய தேர்வுகள் நடைபெற இருக்கின்றன.

மே மாதம் 17ஆம் தேதி கணிதம், மற்றும் விலங்கியல், மே மாதம் 19ஆம் தேதி அறிவியல், மற்றும் வரலாறு, மே மாதம் 21ஆம் தேதி வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் போன்ற தேர்வுகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகள் காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தொடங்கி ஒரு மணி 15 நிமிடம் வரையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஎதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!
Next articleபெட்ரோல் விலை உயர்வு! முதலமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!