உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

0
126
Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!
Big problem for the Indian team in the World Test Championship!! Key Players Suffering From Injury!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பெரும் சிக்கல்!! காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரர்கள்!!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் விளையாடவுள்ள சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் இருவரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவர்களின் பெயர்களும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் பட்டியலில் உள்ளது.

இதற்கு மத்தியில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடும் பொழுது கே எல் ராகுல் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

அது போல மற்றொரு லக்னோ அணி வீரர் ஜெயதேவ் உனத்கட் போட்டிக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பயிற்சியின் பொழுது ஜெயதேவ் உனத்கட் அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் கே எல் ராகுல் மற்றும் ஜெயதேவ் உனத்கட் இருவருக்கும் ஏற்பட்ட காயம் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மட்டுமில்லாமல் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரின் இந்திய அணியின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஷர்தல் தக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் அவர்களும் ஃபிட்னஸ் இல்லாமல் இருக்கின்றனர். மேலும் இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர் பும்ரா ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.