பெருவுடையார் கோவிலுக்கு சிறப்பு அபிஷேகம்!

Photo of author

By Sakthi

தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இருக்கின்ற தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த வருடம் நேற்று முன்தினம் ஆடிப்பூரம் 11:30 மணி அளவில் ஆரம்பமானது. பெருவுடையார், பெரியநாயகி அம்மன் திருமேனிக்கு பால், சந்தனம், தயிர் மஞ்சள், போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அதனையடுத்து கோவில் நுழைவாயிலில் இருக்கின்ற விநாயகர், நால்வர், சொக்கநாதர், சப்த லிங்கங்கள், சப்த கன்னிமார்கள், நடராஜர், முருகன் ,வராகி அம்மன் போன்ற அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், சந்தனம், தயிர் ,மஞ்சள் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று கொண்டு தரிசனம் செய்தார்கள். ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கோவிலில் நேற்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை