பாரம்பரிய நிகழ்ச்சியை கொண்டாடியபோது நடந்த துயர சம்பவம்! இந்தோனேசியாவில் பெரும் சோகம்!

Photo of author

By Sakthi

பாரம்பரிய நிகழ்ச்சியை கொண்டாடியபோது நடந்த துயர சம்பவம்! இந்தோனேசியாவில் பெரும் சோகம்!

Sakthi

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கின்ற ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்ற கடற்கரை இருக்கிறது.இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதனை முன்னிட்டு 20க்கும் மேற்பட்டோர் கடற்கரை அருகே சடங்குகளை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்துச் சென்றது என தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் அதற்குள் 12 பேர் தாமாகவே நீந்தி கரை சேர்ந்தார்கள், மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் பலமணிநேரம் தேடுதல் வேட்டைக்கு பிறகு அவர்கள் 11 பேரும் பிணமாக மீட்கப்பட்டார்கள். பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியின் போது ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.