வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!!

Photo of author

By Sakthi

வெற்றிகரமாக நடைபெற்று வரும் பிக்பாஸ்7!! இதுவரை பிபி வீட்டுக்குள் சென்ற 6 கவர்ச்சி நடிகைகள்!!!
தற்பொழுது கடந்த 1ம் தேதி தொடங்கி பரபரப்புடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இதுவரை நடந்து முடிந்த 6 சீசன்களிலும் 7வது சீசனிலும் கலந்து கொண்டுள்ள கவர்ச்சி நடிகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் எப்படி காதல், நகைச்சுவை, சண்டை ஆகிய கன்டென்டுகளுக்கு பஞ்சம் இல்லையோ அதே போல கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கின்றது. இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆறு கவர்ச்சி நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
நடிகை நமீதா…
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து ரசிகர்களின்  மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை நமீதா. நடிகை நமீதா திரைப்படத்தில் இருந்தாலே படம் பெரிய வெற்றி பெறும் என்று நினைத்து அடுத்தடுத்து நடிகை நமீதா அவர்களை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த இயக்குனர்களும் உள்ளனர். நமீதா அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நடிகை ஷெரின்…
நடிகை ஷெரின் முதன் முதலாக தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் நடிகை ஷெரின் சற்று ஓவர் கிளாமராக நடித்திருப்பார். மேலும் விசில் திரைப்படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்த ஷெரின் அதன் பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். மன அழுத்தம் மற்றும் பல காரணங்களால் உடல் எடை அதிகரித்து நடிகை ஷெரினா இது என்று அனைவரும் சந்தேகத்தில் பார்க்கும் வகையில் இருந்த ஷெரின் ஒரு சில நாட்களிலேயே உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஷெரினாக மாறியுள்ளார்.
நடிகை ரேஷ்மா பசுபலேதி…
நடிகை ரேஷ்மா பசுபலேதி அவர்களை புஷ்பா என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். நடிகை ரேஷ்மா பசுபலேதி தற்பொழுது விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகின்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.
நடிகை மும்தாஜ்…
தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னிகள் வரிசையில் நடிகை மும்தாஜ் அவர்களும் ஒருவர். குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. கவர்ச்சி நடிகையாக சினிமாவில் வலம் வந்த நடிகை மும்தாஜ் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சினிமாவில் நான் வேறு. நிஜ வாழ்க்கையில் நான் வேறு என்று பாகுபாடு நிகழ்ச்சி மூலம் காட்டி நடிகை மும்தாஜ் அவர்கள் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக சேர்த்தார்.
நடிகை யாஷிகா ஆனந்த்..
இதுவரை பார்த்த கவர்ச்சி நடிகைகளில் இருந்து நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் சற்று வேறுபட்டவர். சினிமாவில் கவர்ச்சி காட்டினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மேலும் கவர்ச்சி காட்டினார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் போட்டியாளர்களுமே முகம் சூடாக்கும் வகையில் கிளாமரில் ஓவராக இருந்தார். இதையடுத்து பிக்பாஸ் அவர்கள் ஒரு டிஸ்க் வைத்து நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களின் கவர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு வாரத்திற்கு புடவையை கட்ட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை விசித்ரா…
1990களின் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை விசித்ரா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். அது மட்டுமில்லாமல் நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் சேர்ந்து சில காட்சிகளிலும் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா அவர்கள் கலந்து கொண்டார். இதையடுத்து தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.