Bigg boss Archana: ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவின் காதலர் இவரா?

Photo of author

By Priya

Bigg boss Archana:பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த பிக்பாஸ் 7 சீசனில் கலந்துக்கொண்ட போட்டியாளர் தான் அர்ச்சனா. இவர் இடையில், அதாவது வைல்டு கார்டு போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.

தற்போது 25 வயதான அர்ச்சனா ரவிச்சந்திரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான டைனமிக் என்ற நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கியாக தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ராஜா ராணி-2 இல் வில்லியாக நடித்தார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இந்த சீரியலில்  இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பெற்றது. அதன் பிறகு மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மொரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் விஜய் டிவியில் காமெடி ராஜா, கலக்கல் ராணி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

மேலும் டிமாண்டே  காலனி 2  திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். மேலும் இவர் கோலிவுட்டில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றியும் பெற்றார்.

தற்போது (Bigg Boss Archana Lover) இவரின் காதலரை குறித்த தகவலை இவர் உறுதி செய்தது போல பதிவொன்றை சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுருந்தார். அது தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக இவர் பாரதி கண்ணமா சீரியல் நடிகர் அருண் பிரசாத்தை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் சமூக வலைதளப்பக்கத்தில் பாரதி கண்ணமா சீரியல் நடிகர் அருண் பிரசாத் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழ் அர்ச்சனா என்னுடைய ஹூரோவை புகைப்படம் எடுத்ததற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட நெடிசன்கள் அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் காதல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது என கூறிவருகின்றனர். ஆனால் இதுவரை அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் இது குறித்து எதுவும் கூறுவில்லை.