பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை !!

0
112
#image_title
பிக்பாஸ் ஐஷூ ஆளு இவருதானா! அப்போ நிக்சன் நிலைமை
தற்பொழுது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் ஏது அவர்கள் காதலித்து வருவதாக கூறிய அந்த நபர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் விசித்திர, யுகேந்திரன், பவா செல்லதுரை, நிக்சன், பிரதீப் ஆண்டனி, ஐஷூ, மணிச் சந்திரா உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
தற்பொழுது நடைபெற்று வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிக்சன், ஐஷூ இருவரும் காதலித்து வருகின்றதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் போட்டியாளர்கள் ரவீனா மற்றும் மணி இருவரும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்து நிக்சன் அட்வைஸ் செய்தார். ஆனால் தற்பொழுது நிக்சனே காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த காதல் விளையாட்டில் கவனம் செலுத்தும் நிக்சனால் உண்மையான போட்டியில் கவனம் செலுத்தாமல் ஐஷூ உடன் பேசுவதையே முதல்கட்ட பணியாக வைத்துள்ளார்.
நிக்சன் செயல்களை பார்த்தால் ஐஷூவை காதலிப்பது போல தெரிகின்றது என்றாலும் ஐஷூ அவரை காதலிப்பது போல தற்பொழுது தெரியவில்லை. அதாவது கடந்த வாரம் ஐஷூ மற்றும் நிக்சன் முத்தம் கொடுப்பது போல வீடியோக்கள் வெளியானது. அதற்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக ஐந்து போட்டியாளர்கள் புதிதாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததை அடுத்து நிக்சன் மற்றும் ஐஷூ இருவரையும் பற்றி புட்டுபுட்டு வைத்தனர்.
இதையடுத்து ஐஷூ நிக்சனிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார். ஆனால் நிக்சன் ஐஷூவை விடுவதாக  இல்லை. இருப்பினும் ஐஷூ தனக்கு வெளியில் காதலன் இருக்கிறான் என்று கூறியிருந்தார். அந்த காதலன் யார் என்பது பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
ஏது காதலிப்பதாக கூறிய அந்த நபர் வேறு யாரும் இல்லை. அது பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப் தான் ஐஷூ அவர்களின் காதலன் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் பிக்பாஸ் நிரூப் தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளராக இருக்கும் ஐஷூ சம்பந்தமான அனைத்து பகுதிகளுக்கும் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் லைக் போட்டு வைத்துள்ளார். இதனால் ஐஷூவின் காதலன் நீரூப் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஐஷூ தொடர்பான வீடியோ ஒன்றுக்கு நிரூப் லைக் செய்திருந்தார். இந்நிலையில் இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து நிரூப் டிஸ்லைக் செய்து விட்டார். இதன் மூலம் நெட்டிசன்கள் நிரூப் தான் ஐஷூவின் காதலன் என்று உறுதி செய்து விட்டனர். இதற்கு முன்பாக நிரூப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா, அபிராமி ஆகியோரை காதலித்து பிரிக்கப் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.