எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!! எப்பொழுது ஒளிபரப்பாகிறது என்று தெரியுமா!!?

Photo of author

By Sakthi

எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி!!! எப்பொழுது ஒளிபரப்பாகிறது என்று தெரியுமா!!?

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் தேதி நேரம் குறித்து முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் குறித்த பேச்சு தற்பொழுது இணையத்தில் அதிகமாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது.

அந்த வகையில் இந்த முறை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் நடித்த நடிகை ரவீனா தாஹா அவர்கள் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த நடிகை ரித்திகா அவர்களும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த முறை பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் இருப்தாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் தேதியும் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்படி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மிகப் பிம்மாண்டமாக தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.