நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

Photo of author

By Sakthi

நாளை பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன்7!!! போட்டியாளராக கலந்து கொள்ளும் லவ் டுடே திரைப்பட நடிகை!!!

நாளை(அக்டோபர்1) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.

ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் நாளை(அக்டோபர் 1) முதல் பிற்பகல் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கவுள்ளது.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இரண்டு வீடுகள் இருந்தது போலவே தமிழ் பரப்பும் நிகழ்ச்சியின் 7வது சீசனில் இரண்டு வீடுகள் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.

அதாவது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து பெரும் வரவேற்பு பெற்ற லவ் டுடே திரைப்படத்தில் நடித்த நடிகை அக்சயா உதயகுமார் அவர்கள் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடிகை அக்சயா உதயகுமார் அவர்கள் லவ் டுடே திரைப்படத்தில் நடிகை இவானா அவர்களின் தங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பது நாளை(அக்டோபர்1) தெரியவரும்.