நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா?
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பிலும் உருவாகியுள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,சமீபத்தில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவருடைய அரசியல் ஆர்வத்தால் தானும் கதறி தொடர்ந்து தன்னை சார்ந்தவர்களையும் கதற விட்டு கொண்டிருக்கிறார்.
படத்தின் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதையும், அவர்கள் நடத்தும் போராட்டங்களினால் இந்திய அளவில் விளம்பரம் அடைந்து, தொடர்ந்து வசூலை வாரிக் குவிப்பதையும் நடிகர் விஜய்யின் படங்கள் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்திற்கும் அதே யுக்தியை பயன்படுத்திய நிலையில், இதை சுதாரித்து கொண்ட அரசியல் கட்சிகளோ இம்முறை மறைமுகமாக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் மட்டுமே பல கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிக் குவிக்கும் என்பதை அறிந்த ஆளும் கட்சி தலைமை இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒளிபரப்பும் இந்த அதிகாலை சிறப்பு காட்சிகள் அரசின் அனுமதி பெற்ற பின்னரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும். இதன் காரணமாக நடிகர் விஜயை ஆர்ப்பாட்டம், போராட்டம் இன்றி, தங்களிடம் மன்னிப்பு கோர வைக்க, இந்த சிறப்பு காட்சிகளுக்கு நாசுக்காக தடை விதித்து விட்டது ஆளும் அதிமுக அரசு.
ஏற்கனவே நூறு கோடிக்கு அதிகமாக தமிழக விநியோகஸ்த உரிமையை பிகில் படக்குழு விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், வழக்கமாக ஒளிபரப்பாகும் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட வில்லை என்றால், தாங்கள் வழங்கிய தொகையில் பாதியை திருப்பி தரவேண்டும்’ என விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து பலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பேச்சின் காரணமாக சுமார் 30 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது