இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!

Photo of author

By Hasini

இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!

Hasini

Biography of the Princess! Post a minute trailer!
இளவரசியின் வாழ்க்கை வரலாறு!  ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!
கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியாகி கூட ஏறத்தாழ 25 ஆண்டு காலங்கள் கடந்து  விட்டது. இருந்தாலும் இன்னும் பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவே  உள்ளார்.
அவரது வாழ்க்கையை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தற்போது எடுத்து வருகிறார்கள். பாப்லோ லாரைன் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் டயானா வேடத்தில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவார்ட் மற்றும் இளவரசர் சார்லஸ் வேடத்தில் ஜாக் பார்திங் நடிக்கிறார்கள்.
இந்தப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அடுத்த மாதம் 3-ந் தேதி சிறப்புக்காட்சியாக திரையிடப் பட உள்ளது. மேலும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் அடுத்த மாதம் 15 ம் தேதி இந்தப் படத்தின் பிரத்யேக காட்சியும் இடம் பெறுகிறது.
இந்த திரைப் படம் உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத் தக்கது. தற்போது இந்தப் படத்தின் முதல் ‘போஸ்டர்’  வெளியாகி உள்ளது. தற்போது பட குழுவினர் ஒரு நிமிட நீள டிரைலரை  வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் 1990 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வார இறுதியில் அரச குடும்பத்தின் விடுமுறை இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு இளவரசி டயானா தனது மனச்சோர்வான  வாழ்க்கையை எவ்வாறு போக்கினார் என்பதை காட்சிகள் விளக்குகிறது.
https://youtu.be/Lagauhb5GyY