என்னையா கடிச்ச? தன்னை கடித்த பாம்பை கடித்துத் துப்பிய 2 வயது சிறுமி!

Photo of author

By Sakthi

துருக்கியில் தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி வீட்டுக்கு பின்புறமிருக்கின்ற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பாம்பு அவருடைய உதட்டை கடித்து விட்டது. பதிலுக்கு சிறுமியும், அந்த பாம்பை பிடித்து கடிக்கத் தொடங்கினார். அந்த பாம்பு சிறுமியிடமிருந்து தப்பிக்க போராடியது, ஆனால் அவள் விடவில்லை அந்த பாம்பை மடக்கி பிடித்து கடித்து துப்பி விட்டாள், பின்பு அதே இடத்தில் அந்த பாம்பு உயிரிழந்தது.

அதன் பிறகு சற்று நேரத்தில் வீட்டின் பின்புறம் வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சிறுமியின் வாயில் ரத்தத்துடன் இருந்ததையும், அருகில் பாம்பு இறந்து கிடப்பதையும், பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமையை தூக்கி சென்றனர். அங்கே அந்த சிறுமைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறுமியை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால் உயிருக்கு எந்த விதமான ஆபத்துமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.