உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன?

Photo of author

By Ammasi Manickam

உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வாரிசும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், திமுக இளைஞரணி சார்பில் கடந்த 13 ஆம் தேதியன்று, பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழத்தின் பல மாவட்டங்களிலும் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்தார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்களும் கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக இளைஞரணியினர் மொத்தமாக 644 பேரைக் கைது செய்த தமிழக காவல் துறை அன்று மாலையே அவர்களை விடுவித்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின் சட்ட மசோதாவை கிழித்தது அதற்காக தமிழக காவல் துறை கைது செய்தது என்ற இந்தத் தகவலானது மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்குப் சென்றுள்ளது. 

இதனையடுத்து உடனே தமிழக அரசைத் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சகம், மத்திய அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை எரித்தவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை? என்று இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து தான் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து  காவல்துறை, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்களுக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி ஸ்டாலின் செல்லும் போது அல்லது அதற்கு முன்பாகவே அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஏற்கனவே மிசா போராட்டத்தில் கைது செய்யப்பட்டதாக திமுக தலைவர் பிரச்சாரம் செய்து கொள்வது போல தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த கைது சம்பவம் சாதகமாக அமைந்து விட கூடாது என்பதிலும் ஆளும் தரப்பு கவனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.