tvk-bjp : விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார் பாஜக அண்ணாமலை.
நடிகர் விஜய் சினிமாவை முழுமையாக விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தமிழக அரசியலில் புதிய கொள்கைகளை கொண்டு களம் இறங்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார்.
மேலும், திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாக வெளிப்படையாக அறிவித்தார். தவெக உடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இன்று இவர் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தனது கட்சியினரை 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறியிருந்தார்.
2026 ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் அதற்கு தவெக காரணமாக அமையும் என அறிவித்து இருந்தார். குறிப்பாக அதிமுக பற்றி எவ்வித வித விமர்சனங்களையும் முன் வைக்க வில்லை. அதானால் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்கும் என்ற தகவல் வெளியானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சிந்து வருவதால் கட்டாயம் 2026 ல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கட்டாய சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பாஜக அண்ணாமலை அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு தமிழக திரும்பி இருக்கிறார். இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி பேட்டியில் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். மேலும், தமிழக அரசியல் களத்தில் தற்போது திமுக கூட்டணி, பாஜக, நாம் தமிழர் கட்சி, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் 5 முனை போட்டி நிலவுகிறது எனக் கூறியது கவனம் பெற்று வருகிறது.