ADMK AMMK: அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களாக அறியப்பட்டு வந்த டிடிவி தினகரன், சசிகலா, ஒ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அண்மையில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.
இவ்வாறு அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகி, இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் டிடிவி தினகரன் விஜய்யுடன் கூட்டணி அமைத்து அதிமுகவை வீழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
அதிமுக, பாஜக-விலிருந்து விலகிய டிடிவி தினகரன் கடைசியாக தவெகவை தான் நம்பியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக பாஜக, தவெக-வை கூட்டணியில் இணைக்க முயல்கிறது என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது. விஜய் பாஜகவில் இணைந்தால் அது திமுக-விற்கு மட்டுமல்லாது டிடிவி தினகரனுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பாஜக, அதிமுக, தவெக கூட்டணி தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு வேலை இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் டிடிவி தினகரனின் நிலைமை என்னவாகும் என்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.