தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்! பாஜக நிர்வாகி அதிரடி கைது!

Photo of author

By Sakthi

கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் திருச்சி புறநகர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், துறையூர் பாலக்கரையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள் என சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற செந்தில்குமாரை வழிமறித்து சோதனை செய்தார்கள் தேர்தல் பறக்கும் படையினர். அப்போது அவர் அரசு தடைசெய்திருக்கின்ற 3 கிலோ எடையுள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள், 860 கிராம் பான் மசாலா மற்றும் 450 கிராம் புகையிலை உள்ளிட்ட ராக்கெட்டுகளையும் சட்டவிரோதமாக எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையைச் சார்ந்தவர்கள் செந்தில்குமாரை துறையூர் காவல்துறையில் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தார்கள்.