நடிகை குஷ்பு பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களை கண்டித்து வருகிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நாக்பூர் டவுசரவலாக்களால் தமிழ்நாட்டில் எதிர்காலம் என்னவென்று நிர்ணயிக்க இயலாது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயத்திற்கு பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அட முட்டாளே இத்தாலி பார் டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்ய நினைக்கும் பொழுது எங்களுக்கு தமிழகம் மட்டும் கிடையாது இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு எடுக்கும் உரிமையும் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.
அவருடைய இந்த பதிவு குறித்து பாஜகவை சார்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் பாஜகவின் சென்னை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகியான கோபிகிருஷ்ணன் என்பவர் கண்டவனெல்லாம் செல்ல கோவில் கருவறை என்ன கனிமொழியின் படுக்கை அறையா என்று தகாத முறையில் விமர்சனம் செய்திருந்தார். அவருடைய இந்த பதிவை பார்த்த இணையதள வாசகர்கள் பலரும் நடிகை குஷ்பு அவர்களுக்கும், பாஜகவில் இருக்கின்ற மற்ற பெண் தலைவர்களைக் செய்து கேள்வி எழுப்பிய வந்தார்கள் இந்த நிலையில், அந்த பதிவுக்கு நடிகை குஷ்பு தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதில் கொடுத்திருக்கிறார்.
அந்த பதிவிற்கு அவர் தெரிவித்த கண்டனத்தில் கட்சி அல்லது ஒரு தனி நபரை பொருட்படுத்தாமல் ஒரு பெண்ணை பற்றி இவ்வாறு இழிவாக கருத்து தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கனிமொழி ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு பெண், மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர் மரியாதைக்கு உரியவர் அதனை கனிமொழிக்கு ஒவ்வொரு இடத்திலும் கொடுத்திட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.