
ADMK BJP: 2026 தேர்தலை நோக்கி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் வலுப்பெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தங்களது தனி பெரும்பான்மையை இழந்து வரும் நிலையில், கூட்டணி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதனை கருத்தில் கொண்ட அதிமுக தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் திமுகவிடம் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகின்றன.
திமுகவை விட அதிமுகவில் அதிகளவு சச்சரவு எழுந்து வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தாலும், அதனுள் பல வெளிவரதா பிரச்சனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் தற்போது புதிதாக ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. NDA கூட்டணியிலிருந்து பிரிந்த ஓபிஎஸ்யும், தினகரனும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது, அவரை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று திட்டவட்டமாக கூறி வந்தனர்.
ஆனால் பாஜக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த நிலையில், இவர்களின் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருந்தது. மேலும் முதல்வர் வேட்பாளரை மாற்றுவது என்பது பாஜகவின் தனிப்பட்ட முடிவல்ல, அது இபிஎஸ்யின் கையில் உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறியது, இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளரிலிருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. முதல்வர் வேட்பாளரை மாற்றும் செய்தியறிந்த இபிஎஸ், பாஜக, ஓபிஎஸ், தினகரன் மீது கடும் கோபத்தில் உள்ளார் என்று இபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
