
TVK BJP: செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது திமுகவின் சதி வேலை என்று தவெகவினர் கூறி வந்தனர். தவெகவின் அரசியல் அறியாமை மற்றும் விஜய் தாமதமாக வந்தது தான் இதற்கு காரணம் என்று திமுகவினர் கூறி வர, இதனை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.
பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்த தவெக சிபிஐ கோரி மனு தாக்கல் செய்ய, உச்ச நீதிமன்றம் அதற்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் விஜய் இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் சிபிஐ பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறது என்று ஏற்கனவே ஒரு முறை விஜய் கூறியிருக்க தற்போது அதனை வரவேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் பாஜக ஒரு பார்வையில் விஜய்க்கு உதவுவது போல காட்டிக்கொண்டாலும், மற்றொரு புறம் விஜய்க்கு எதிராக செயல்படுவதற்காகவே சிபிஐ விசாரணையை கோரி இந்த வழக்கை தான் வசப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிபிஐயை தன் கையில் வைத்திருக்கும் பாஜக அதன் மூலம் விஜய்யிக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சிபிஐ விசாரணைக்கு விஜய் மகிழ்ச்சி தெரிவித்தற்க்கு காரணம் கரூர் சம்பவம் அவருக்கு எதிராக திரும்பி விட கூடாது என்பதற்காக தான் என்றும் சிலர் கூறுகின்றனர்.