பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் இருக்கின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்தார், இதனை காணொலிக் காட்சியின் மூலமாக கேட்க மற்றும் பார்க்க நாமக்கல் நகர பாஜக வின் சார்பாக திருச்செங்கோடு ரோடு சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நேரலை காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராமலிங்கம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அப்போது பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக அரசு மிரட்டும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது. இதற்கு பாஜக ஒருபோதும் பயப்படாது தமிழகத்தில் இருக்கின்ற பெரும்பான்மையான ஊடகங்கள் நடத்தும் விவாத மேடைகளில் பிரதமரை தரக்குறைவாக பேசுகிறார்கள் அந்த சமயங்களில் தமிழக அரசு ஏன் வழக்கு போடவில்லை. திமுக தலைமையிலான தமிழக அரசு விமர்சனத்திற்கு அஞ்சி நடுங்குகிறது. பத்திரிக்கையாளர்கள், சமூகவியலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்கிறார்கள்.
அவர்கள் கூறும் கருத்தில் உண்மை இல்லை என்றால் அது தொடர்பாக கருத்து தெரிவித்து விட்டு போய்விடலாம் ஸ்டாலின் எதிர்க்கட்சியில் ஒரு கருத்து சுதந்திரம், முதலமைச்சராக இருந்தால் ஒரு கருத்து சுதந்திரம், அவருக்கு இரண்டு கருத்து சுதந்திரமா? சமூக ஊடகவியலாளர்களை கைது செய்ததால் அவர் சொன்னது உண்மை இல்லை என்று ஆகிவிடுமா? திமுக தலைமையிலான தமிழக அரசு மிரட்டும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது. திமுக மிரட்டி வருகின்ற சூழ்நிலையில், பாஜக இப்போது இல்லை என்று தெரிவித்தார்.