கைது நடவடிக்கைக்கு பாஜக கடும் தாக்கு! ஆட்சி தலீபான்களை போல் அல்லவா உள்ளது?
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின உரையின்போது நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்-மந்திரியை அதாவது உத்தவ் தாக்கரேவை நான் அங்கு இருந்திருந்தால் அறைந்திருப்பேன் என ஒரு சர்ச்சையான கருத்தை கூறி கைதாகி உள்ளார்.
இவர் ஒரு மத்திய அமைச்சர் ஆவார். இவரை மராட்டிய போலீசார் கைது செய்தனர். கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய மந்திரி ஒருவர் கைது செய்வது இதுதான் முதல் முறையாகும். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது. மத்திய மந்திரி நாராயண் ரானே கைது அரசியலமைப்பை மீறிய செயல் ஆகும். இந்த நடவடிக்கையால், நாங்கள் எங்களை ஒதுக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும், அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, ரானேவின் கருத்தை பாஜக ஆதரிக்கவில்லை. அதே வேளையில் அவருக்கு ஆதரவாக 100 சதவிகிதமாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளோம். தொடர்ந்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கருவியாக மாநில காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சட்டம், ஒழுங்கு இருக்க வேண்டும் ஆனால் தலீபான்கள் போன்ற ஆட்சி நிர்வாகம் இருக்கக்கூடாது என்றும் கூறினார்.