ப சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு! பாஜக தலைவர் பரபரப்பு குற்றசாட்டு

Photo of author

By Ammasi Manickam

ப சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு! பாஜக தலைவர் பரபரப்பு குற்றசாட்டு

Ammasi Manickam

P Chidambaram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டை கிளப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச் செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப் பெறவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் நிற்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக தலைவரான ரவீந்தர் ரெய்னா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  இது குறித்து அவர் கூறியதாவது“இவ்வாறு அவர் கூறுவதன் மூலமாக ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக் கொண்டேயிருக்கிறார்கள்” என்று அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

மேலும் ப.சிதம்பரம், திக்விஜய்சிங் போன்றவர்கள் இவ்வாறு தொடர்ந்து நாட்டுக்கு எதிராக பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுல் காந்தியும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு என்ற பா.ஜ.க. தலைவரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.