தமிழ்நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக தமிழகத்தில் கவனிக்கத்தக்க வாக்குகளை பெற்றிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 12 இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது அதாவது நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் மூன்றாவது இடத்தை பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக.
பரபரப்புடன் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. மாநகராட்சி பகுதிகளில் 60 சதவீத வாக்குகளையும், நகராட்சிகளில் 61 சதவீத வாக்குகளையும் கைப்பற்றி திமுக அபார வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மாநகராட்சி பகுதிகளில் 11 சதவீதமும், நகராட்சி பகுதிகளில் 16 சதவீத வாக்குகளையும், பெற்று 2வது இடத்தை பிடித்தது.
அதற்கடுத்தபடியாக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தாலும் தனித்துப் போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் அதிக கவனம் பெற்றிருக்கிறது.
அதிலும் தனித்துப் போட்டியிட்டு சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். சென்னை மாநகரில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 12 வார்டுகளில் 2ம் இடம் பிடித்திருக்கிறது பாஜக.
சென்னையில் 116 வார்டுகளில் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. அந்த கட்சி.
பேரூராட்சியில் 130 பகுதிகளில் வெற்றி, நகராட்சியில் 56 பகுதிகளில் வெற்றி, மாநகராட்சியில் 22 பகுதிகளில் வெற்றி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெற்றிருந்த நிலையில் இடப்பங்கீடு சுமுகமாக அமையாத காரணத்தால், பாஜக தனித்து போட்டியிடுவதாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தபோது பாஜகவின் நிலைப்பாடு பல்வேறு குழப்பத்தை உண்டாக்கியது.
ஆனாலும் கூட தற்சமயம் தமிழகத்தில் பாஜகவின் பலம் என்னவென்பதை மற்ற கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவே அறிந்து கொள்வதற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது.
ஆனாலும் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கவில்லை இதன் காரணமாக 40 சதவீதம் வாக்கு பதிவாகவில்லை. இருக்கக்கூடிய வாக்குகளின் அடிப்படையில் தான் சதவீதங்கள் பகிரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தோமானால் பாஜகவின் வாக்கு சதவீதம் மட்டுமே சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் உயர்ந்து இருக்கிறதா என்பது அடுத்தடுத்து தேர்தலில் தான் தெரியவரும் என தெரிவிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.