கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

Photo of author

By Hasini

கூட்டத்தில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு! இதற்காகவா என எதிர்கட்சிகள் கேள்வி!

கடந்த வாரத்தில் இருந்தே இந்தியாவில் செல்போன் ஒட்டுகேட்பு நடந்ததாக மத்திய அரசின் மீதும், பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மீதும் எதிர் கட்சிகள் மற்றும், தன்னார்வலர்கள் சிலர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி முதலியோர் கடும் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர். ஏனெனில் இந்தியாவில் மட்டும் 300 நபர்களின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதில் எதிர் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், தன்னாலவர்கள் என பலரின் எண்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைதொடர்ந்து நடந்த நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலும் எதிர்கட்சியினர் இதை பற்றி விவாதித்து, கூட்டம் ஒத்திவைக்கும் அளவிற்கு வாக்குவாதங்கள் தொடர்ந்தன.

அதன் காரணமாக திங்கள் கிழமை வரை (26.07.21) அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையில், தகவல் மற்றும் தொழில் நுட்ப நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் உளவு விவகாரம் குறித்து விவாதிக்கவும் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிலைக் குழு கூட்டங்களை நடத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தின்போது குழு கூட்டங்களை நடத்த முடியாது என்றும் கூறினார். செவ்வாய்க்கிழமை மேலும் ஐந்து கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டன என்பதும் அவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் சரியாக நேரத்தில் அறிவிக்கப்பட வில்லை என்றும் அவர் குறை கூறினார். தொடர்ந்து ஆட்சேபனைகளை எழுப்பிய அவர், மேலும் ஐந்து பாஜக எம்பிக்கள் உடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். மேலும் தகவல் மற்றும் தொழில் நுட்பம் சார்பாக 32 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் இன்று கூடுகிறது. இதற்காக பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சியில் குடிமக்களின் தரவுகள், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை என்று மக்களவைத் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலைக் கூட்டத்தில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.