முக்கிய இலாக்காக்களுக்கு நோ சொன்ன பாஜக.. எதிர்பார்ப்பில் மோடியின் 3.O..!!

Photo of author

By Priya

முக்கிய இலாக்காக்களுக்கு நோ சொன்ன பாஜக.. எதிர்பார்ப்பில் மோடியின் 3.O..!!

Priya

Modi Cabinet details in Tamil

Modi Cabinet Details in Tamil: இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் வெளிநாடுகளில் இருந்து முக்கிய தலைவர்கள் உட்பட 8,000க்கு மேற்பட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த முறை கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்கும் மோடி தலைமையிலான பாஜக, அந்தக் கட்சிகளுக்கு இலாக்காக்களை பிரித்துக் கொடுப்பதில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பதை இன்று மாலை தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் பிரதமராக இன்று இரவு 7.15 மணிக்கு பாஜக தலைவரான மோடிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் மோடியுடன் பதவி ஏற்கப் போகும் அமைச்சர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ள நிலையில் மோடியுடன் 30 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் புதிய அமைச்சரவையில் இணை அமைச்சர்களுடன் சேர்த்து மொத்தம் 78 முதல் 81 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கிய பதவிகளான உள்துறை, வெளியுறவுத்துறை, நிதி துறை, பாதுகாப்பு துறை போன்ற முக்கிய துறைகளை பாஜகவினரே தக்க வைத்துக் கொள்வார்கள் என்றும், இந்த இலாக்காக்களை மற்ற கூட்டணி கட்சிக்கு பாஜக விட்டுக்கொடுக்காது எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி மோடி ஆட்சி அமைக்க காரணமான நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபுவின் கட்சிகள் மொத்தம் 28 மக்களவை இடங்களில் வென்று உள்ளது. இது இந்த முறை மோடி ஆட்சி அமைக்க முக்கிய ஒன்றாக உள்ளது. எனவே இந்த இரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பார்க்க போனால் சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு 4 துறைகளும், பீகாரின் பீகாரின் ஜேடியூ 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் இடம்.. மோடியின் தடாலடி!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!